Sivaraj Parameswaran
காதல் கொண்டேன்
Updated: Aug 26, 2022
ராஜ ராஜ
சோழன் நான் எனை
ஆளும் காதல் தேசம்
நீ தான் பூவே காதல்
தீவே...
இந்த பாட்டை ப்ளூடூத் ஹெட் செட்டில் கேட்டு கொண்டு மெட்ரோ ரயிலில் கதவோரம் நின்று கொண்டு இரவு நேர சென்னை டிராபிக்கை ரசித்துக்கொண்டு வந்து கொண்டிருந்தேன். அடுத்த ஸ்டாப்பில் இறங்க ஒரு கூட்டம் என் பின் புறம் நிற்க சற்று ஒதுங்கி நின்றேன், ரயிலின் சடன் பிரேக், என்னை நிலை தடுமாற செய்தது. தடுமாறி சாஷ்டாங்கமாக ஒரு பெண்ணின் காலில் விழுந்தேன்! அவள் என்னை பார்த்து சிரித்து ஒதுங்கினாள்! இடது கை Frozen Shoulder-ஆல் (தோள்பட்டையின் இரண்டு எலும்புகளையும் இணைக்கும் கேப்ஸ்யூல் என்ற ஜவ்வு இறுகிப்போகி எவ்வித அசைவுமின்றி இருக்கும். அதற்கு பெயர் தான் Adhesive Capsulitis அல்லது Frozen shoulder) பாதிக்கப்பட்டதால் கையை ஊன்றி ஏழ முடியாமல் கஷ்டப்பட்டேன். என் கட்டுக்கோப்பான உடம்பையும் வயதையும் கண்டவர்கள் உதவிக்கு முன் வரவில்லை. நான் கீழே விழுந்து உருளுவதை வித்தியாசமாய் பார்த்தார்கள். நானும் உதவிக்கு அழைக்கலமாவேண்டாமா என்று யோசிக்க, ரயில் ஸ்டேஷனில் நின்றது! கூட்டம் வெளியேறியது! புதிதாய் நீல நிற மருத்துவர் ஆடை அணிந்த ஒரு பெண் உள்ளே நுழைய நான் கீழே விழுந்து கிடப்பதை கண்டு ஓடோடி வந்து என்னை தாங்கி நிற்க வைத்தாள்! "Are You Alright?" என்று கேட்க "Frozen Shoulder" என்று பதில் சொன்னேன், "Oh Crap!" என்று சொல்ல ரயில் கதவு மூடியது. அவள் treatment பற்றி பேசிக்கொண்டிருக்க! அவள் கண்கள் என்னை கிரங்கச்செய்தது, மாஸ்க் அணிந்திருந்ததால் அவள் பச்சை நிற கண்கள் பளிச்சென்று தனியாக தெரிந்தது,
கள்ளுர பார்க்கும்
பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும்
உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே...
ஹெட் செட்டில் கேட்ட இந்த பாடல் வரிகள் மொத்த ரயிலும் கேட்பது போல் தோன்றியது!! அவள் பேசியது எனக்கு மௌனமாகி வாய் யசைப்பது போல தோன்றியது! என் கண்கள் அவள் கண்களை ரசிக்க துடங்கியது! என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் பேசுவதற்கு அமாம் போட்டுக்கொண்டிருந்தேன்! மாஸ்க்கில் அவள் சிரித்து பேசுவது தெளிவாக தெரிந்தது...
அடுத்த ஸ்டேஷனில் நளினி ஏறினாள் நேரே என்னிடம் வந்து நின்று "ஹாய் என்ன டா சட்டைல அழுக்கு!" என்று கேட்க பச்சை நிற கண் அழகி என்னை பார்த்து முழிக்க! நான் "My Wife நளினி" என்று அறிமுகம் செய்து வைத்தேன். "ஹாய்!" என்று சிரித்த நளினி, காதோரம் "யாரா இவங்க!" என்று என்னிடம் கேட்க, நான் ரயிலில் விழுந்த சம்பவத்தை அவளிடம் சொன்னேன். நளினி துடிதுடித்துப்போனாள்.
நான் நளினி என் மனைவி என்று சொன்ன பொழுது, அவள் கண்களில் தெரிந்த ஏமாற்றத்தை என்னால் உணர முடிந்தது! நானும் சில நிமிடங்கள் என் நிலை மறந்து அவள் கண்களை அவளை அறியாமல் காதலித்தேன்!! அதன் காரணத்தாலேயே அவளிடம் பெயர் கேட்கவில்லை. அடுத்து நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது. நானும் நளினியும் ஒரு formal சிரிப்பை அவளிடம் பரிமாறிக்கொண்டு இறங்கினோம்! முதல் முறையாக ஸ்டேஷனில் நடந்து செல்லும் பொழுது திரும்பி பார்த்தேன், அவள் என்னை பார்த்துக்கொண்டிருக்க ரயிலின் கதவுகள் மூடின....
ஐந்து நிமிடங்களில் எந்த ஒரு அழகு கவர்ச்சியுமின்றி!! கண்களை மட்டும் கண்டு காதல் கொள்ளமுடியுமா?
- காதல் கொண்டேன் (பெயர் சொல்ல விரும்பா 5 நிமிடத்தில் காதல் வசப்பட்டு அதிலிருந்து மீண்ட பச்சை நிற கண்ணுடைய கல்யாணமான காதலன்)
இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் முற்றிலும் உயிரோட்டமுள்ள கற்பனையே,
ஆனால் இதில் வரும் மெட்ரோ ரயில் மட்டும் உண்மை!!
உண்மைக்கு புறம்பாக ஐந்து நிமிட பொய் கதையை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.