top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

காதலும் | காமமும் | கல்யாணமும்

Updated: Aug 26, 2022கல்யாண் 1983-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி பிறந்தவன்! அப்பா ராமய்யா ஒரு தையல்காரர்! பெயரெடுத்தவர் அந்த காலத்திலே 6 பேர் வேலை செய்யும் கடை! மிராஸ்தாரர்களும் சினிமா பிரபலங்களும் வந்து செல்லும் கடை வட சென்னையில் அவரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு பிரபலம் ராமய்யா கடை.


சின்ன வயதிலே அம்மா இறந்து விட்டதால் சின்னமா தான் கல்யானை வளர்த்து வந்தார். ராமய்யாக்கு குடி புகை போன்ற கேடு கெட்டபழக்கம் எதுவும் கிடையாது பெண்களின் மீது மட்டும் ஒரு அதீத மயக்க போதை இருந்தது. பெண் பித்து என்று கூட சொல்லலாம்! மற்றபடி தந்திரமான வியாபாரி! மறுமணம் செய்து கொள்ளவில்லை! ஒரே மகன் கல்யாண்! ஒரே வாரிசு! பெண் போதை தேவைப்படும் பொழுது! காசு கொடுத்து தனது தேவையை பூர்த்தி செய்து கொள்வார்! மற்றபடி வைப்பாட்டியோ சின்ன வீடோ பெரியவீடோ அவர் வைத்துக் கொள்ளவில்லை! இருந்தும் சமூகம் அவரை கேவலமாக பேசியது இத்துணைக்கும் அவர் கள்ளம் கபடம் இல்லாதவர்! சாதி வேறுபாடு இல்லாதவர்! தான வள்ளல்! வறுமை கீழ்க்கோட்டில் உள்ள சமுதாயத்துக்கு தன்னால் இயன்ற வரை உதவி செய்பவர் முக்கியமாக உதவி செய்யும் பொழுது கேமரா கொண்டுசெல்லாதவர் மிக முக்கியமாக அதற்கு போஸ்டர் அடித்து கூட்டம் கூட்டாதவர் ராமய்யா! இப்படி ஒருவருக்கு மகனாக பிறந்த கல்யாண் தினம் தினம் வெறுமையில் வாழ்ந்து வந்தான்!

கல்யாணுக்கு பெண்கள் என்றால் ஒரு ஈர்ப்பு குறிப்பாக பெண்களின் கூந்தலும் கண்களும் அவனது பலவீனம்! பெண் கறுப்போ சிவப்போ குண்டோ ஒல்லியோ அவன் பார்ப்பதென்பதோ அவள் கண்களை தான் அதிலும் அவள் கூந்தல் பட்டு போல் மென்மையாக இருந்தால் போதும் வெளிச்சம் கண்ட ஈசல் போல் அவளை சுற்றி சுற்றி வருவான். அப்பனை போல் இவனும் ஒரு பெண் பித்தன் என்று சமுதாயம் பேசத் தொடங்கத்தான் தாமதம்! இதனால் எந்த பெண்ணும் இவனை ஏறெடுத்து பார்த்ததில்லை! மாறாக ஒளிந்து பார்த்தார்கள்! மறைவாக பழகினார்கள்! பார்க்க கமலஹாசன் போல இருந்ததால்! மன்மதனாக வலம் வந்தான்! மன்மதலீலைகளும் புரிந்தான்!


வயது வித்தியாசமின்றி எல்லா வயது பெண்களுடன் பழகினான்! கல்யாணம் ஆனவர்கள் ஆகாதவர்கள் என்ற வேறுபாடின்றி பழகினான்! ஒரே ஒரு கண்டிஷன் தான் வைத்திருந்தான் 18 வயதை கடந்தவர்களாக இருக்க வேண்டும்! இதை அவன் 16 வயதிலிருந்து கட்டுக்கோப்பாக கடைபிடித்து வந்தான். காலம் வேகமாக ஓடியது அவனது காதல் காம லீலைகளும் வேகமாக பெருகியது.

16 வருடங்கள் உருண்டோடியது! கல்யாண் இதுவரையிலும் கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தான்! கல்யாணம் தான் செய்து கொள்ளவில்லை தவிற குழந்தைகள் பல பிறந்திருக்கும் என்ற வதந்திகள் சுற்றிக்கொண்டிருந்தது! காரணம் இன்று போல் அன்று அறிவியல் வளரவில்லை பூசை செய்து குழந்தை பெற்றுக்கொள்ளும் கூட்டம் நிறைய இருந்தது அதிலும் கல்யாணின் பூசை சக்ஸஸ் ரேட் 99% என்பதால் நிறைய சான்ஸ் இருக்கு என்பது சமூகத்தின் பேச்சு!


பெண்கள் தான் இவனது கடையின் முக்கிய வாடிக்கையாளர்கள்! இவனும் தையல் தொழிலில் இறங்கினான்! பெண்களின் ஜாக்கெட் தைப்பதில் இவன் பலே கில்லாடி! இவனது கடையின் பெருமை அவனின் தந்தை கடையை மிஞ்சியது! அப்பாவை போல் ஒரு கடையோடு நின்று விடாமல் சென்னையில் மட்டும் 16 கிளைகளை திறந்தான்! மாதம் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தான்! பேஷன் காலேஜில் இவனது பேச்சை கேட்க பெண்களின் கூட்டம் அலைமோதியது! ஒருமுறை நடிகர் சித்தார்த் மேடையில் கல்யாணை கண்டு பெண்கள் ஆரவாரிப்பது பார்த்து "யார் இவர்" என்று ஆச்சரியப்பட்டே போனார் நடிகர் சித்தார்த்! இப்படி ராஜா வாழக்கை வாழ்ந்து கொண்டிருந்த கல்யாணுக்கு முதல் முறையாக காதல் வந்தது அதுவும் உண்மை காதல் அதாவது அந்த பெண்ணையே காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற வேண்டாத ஆசையும்! கேடான கொடுமையான எண்ணம் வந்தது!

இந்த கொடுமை நடக்க காரணமா இருந்ததற்கு காரணம் பிரேமம் படம் தான், அந்த படம் பார்த்து சாய் பல்லவி மீது தீராத காதல் கொண்டு சுத்த ஆரம்பித்தான். தினமும் மலரே பாடலை ஒரு ஆயிரம் முறை கேட்க ஆரம்பித்தான்!!மலரே நின்னை
காணாதிருந்நால்
மிழிவேகிய நிறமெல்லாம்
மாயுன்ன போலே

அலிவோடு என் அரிகத்தின்
அணையாதிருந்நால்
அழகேகிய கனவெல்லாம்
அகலுன்ன போலே...

இந்த காதல் அவனது லீலைகளை பாதிக்க தொடங்கியது! பெண் பித்தனாக வாழ்ந்த கல்யாண் இப்பொழுது பல்லவி பித்தனாக மாறினான்! கல்யாண் மற்ற பெண்களை கண்டுகொள்ளாததால் அவன் மீது ஆசைக் கொண்ட பெண்கள் கல்யாண் பற்றி அவதூறு பரப்ப தொடங்கினர்! அதிலும் ஒருவள் கல்யாணிற்கு பாலியல் வியாதி என்று பரப்ப! அவன் சமூகத்தில் கல்யாண் ஒரு எய்ட்ஸ் வியாதிக்காரனாக மாறி போனான்! பெண்கள் அவர்களாகவே அவனை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர்.

விஷயம் ராமய்யா காதிற்கும் சென்றது. மகனின் நிலை கண்டு வருத்தமடைந்தார். கல்யாணை கண்டு இதை பற்றி பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்தார். வீட்டில் எங்கு தேடியும் காணாத கல்யாணை, மொட்டைமாடியில் சென்று பார்க்க அங்கு தண்ணி டேங்க் மீது ஏறி உட்கார்ந்திருந்தான். அவன் அருகில் போய் உட்கார அவன் தனது கனவிலிருந்து வெளிவந்தான். "என்ன டாடி புதுசா என்ன தேடி மொட்டைமாடிக்கு வந்திருக்க? கடையில எதாவது பிரச்சனையா?" என்று அவன் கேட்க "அதெல்லாம் ஒன்னும் இல்ல டா" என்று ராமய்யா முணுமுணுக்க "அப்புறம் என்ன டாடி?" என்று கல்யாண் கேட்க, ராமய்யா மனம் திறந்து பேச ஆரம்பிக்கின்றார், "உன்ன பத்தி ஊரு என்ன பேசுது தெரியுமா?" "என்ன பேசுது?" "ஏன் டா இப்படி இருக்க? என்ன ஆச்சு உனக்கு?" "டாடி, சொல்றேன்னு தப்பா நினைக்க மாட்டியே!!" "நினைக்க மாட்டேன் சொல்லு!!" "டாடி, இத்தன நாள் நான் ஒரு பொம்பள பொறுக்கியா இருந்தேன்! ஒருத்தன் தப்பா சொல்லலே! இப்போ திருந்தி வாழலாம்னு பார்த்தா!! அவ அவ புரளி கிளப்புறானுங்க அதில கூட அந்த சீதா...எனக்கு புரியல டாடி!!!" அதற்கு சிரித்துக்கொண்டு ராமய்யா "தம்பி நீயும் சரி நானும் சரி எந்த ஒரு பொண்ணையும் அவ விருப்பம் இல்லாம தொட்டதில்லை! அதனால நீ ஒரு பொம்பள பொறுக்கி இல்ல அத மொதல்ல தெரிஞ்சுக்க! உனக்கு பொண்ணுங்க மேல ஒரு தீராத மோகம் அதை நீ அவங்க விருப்பத்தோடு அனுபவிக்குறே சுருக்கமா சொல்லணும்ன்னா மகிழ் - மகிழ் கேள்விப்பட்டிருக்கியா?" என்று கேட்க கல்யாண் புரியாமல் முழிக்கின்றான் "மகிழ் - மகிழ்னா மகிழ்வித்து மகிழ்ன்னு சொல்லுவாங்க, தம்பி நாமெல்லாம் பெண்களை அடிமையா பார்க்குற சூர்யவம்சம் கிடையாது பெண்களை சமமா பார்க்குற (அரக்க) நாக வம்சம் அதனால நீ உன்ன தாழ்த்திக்காதே! நான் உனக்கு உண்மையா ஏதாவது நோய் இருந்து அதுக்காக பயந்து தளர்ந்து போய்ட்டியான்னு பயந்து உனக்கு ஆறுதல் சொல்ல வந்தேன்! புகை பிடிச்சா கேன்சர் வரும் குடிச்சா லிவர் கெட்டு போகும் அது போலத்தான் இதுவும். எந்த ஒரு போதைக்கும் ஒரு எல்லை உண்டு அத தெரிஞ்சு அதற்கு ஏத்த போல வாழனும்! என்ன டா ஒரு அப்பனே இப்படி சொல்றன்னு நினைக்காதே! ஒரு பொண்ணை சமமா பாக்குறவன் நல்லவன்! அவ அனுமதி இல்லாம அவளை தொடக்கூடாதுன்னு நினைக்குறவன் நல்லவன்! அவளை ஒரு போதை பொருளா மட்டும் பார்க்காம அவளையும் சக மனிதனா பார்குறவன் நல்லவன்! நீ நல்லவன்! இப்போ சொல்லு உன் பிரச்சனை என்ன?" என்ற ராமய்யாவின் கேவிக்கு தன் நீண்ட நேரம் மௌனம் கலைத்து சாய் பல்லவியை பற்றியும் அவள் மீது உள்ள காதல் பற்றியும் சொல்கின்றான் கல்யாண்.

இதை கேட்ட ராமய்யா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார்! "இதுக்கு போய்யா நீ துவண்டு போயிட்டே! அவ்வளவு புடிச்சிருந்தா நேரா போய் அவகிட்ட புடிச்சு இருக்குன்னு சொல்ல வேண்டியது தானே". குழம்பியபடி கல்யாண், "அதுக்கு அவ எங்கிருக்கா எப்படி இருக்கான்னு தெரியாதே?" "ஒரு நிமிஷம்" என்று கூறி ராமய்யா தனது மொபைல் போனை எடுத்து யாரிடமோ பேசி அட்ரஸையும் அடுத்த காலில் சாய் பல்லவியிடம் அப்பாய்ண்ட்மென்டையும் வாங்கினார் "நாளைக்கே ஹைட்ரபாத் போறே சாய் பல்லவியை மீட் பண்றே உன் காதலை சொல்றே அவளையும் கூட்டிட்டு திரும்பி வர" உற்சாமான கல்யாண் ராமைய்யாவை ஆரத்தழுவி "தேங்க்ஸ் பா" என்று சொல்கின்றான்.

கல்யாண் மறுநாள் ஹைதராபாத் செல்கின்றான், பேலஸ் ஹோட்டலில் உள்ள வரவேற்பு கஃபே ஷாப்பில் சாய் பல்லவிக்காக காத்திருக்கின்றான். 10 நிமிடம் கழித்து சாய் பல்லவி கண்ணாடி லிப்ட்டில் கீழே இறங்கி நேரே அவனை நோக்கி வர கல்யாணின் நெஞ்சு படபடக்கின்றது! அவள் இவனிடம் வந்து கைகுலுக்க அவளது உஷ்ணம் இவனது உடலை தீயாய் சுடுகின்றது! நொடிக்கு 200 தடவை நெஞ்சு அடித்திருக்கும் போல குபீரென்று கல்யாணிற்கு வேர்த்துவிடுகின்றது. சாய் பல்லவி சிரித்துக்கொண்டே "என்ன விஷயமா வந்திருக்கீங்க? டைரக்டரா? கதை சொல்ல போறீங்களா" என்று கேட்க அவன் அங்கு எதற்கு வந்தான், தான் யார் என்பதை ஒரு வரி விடாமல் சொல்கின்றான். கல்யாணை அது வரை சிரித்த முகமாக பார்த்துக்கொண்டிருந்த சாய் பல்லவி கோபமாக மாறி பளீர் என்று ஒரு அறைவிடுகின்றாள். கண்கள் கலங்கி மயங்கி தடினமான அந்த நாற்காலியின் தண்டில் தலை இடித்து கீழே விழுகின்றான் கல்யாண்...


கல்யாணை தண்ணீர் தெளித்து ஏழ வைத்தபொழுது, அவன் ரோட்டில் படுத்துக்கிடந்தான், ராமய்யா கையில் துடைப்பத்துடன் கழுத்தில் இன்ச் டேப் பாக்கெட்டில் கத்திரியுடன் கோபமாக கல்யாணை பார்த்து நிற்கின்றார்! அருகில் கடையை பெருக்கிதள்ள வந்த சீதா கல்யாணை மார்போடு அணைத்து ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தாள் "நாய காஜா அடிக்க சொன்னா நைட்டு புரா பிட்டு புக் படிச்சு அதையே மூஞ்சுல வச்சு தூங்கிட்டு இருக்கான்! இவனெல்லாம் வச்சு என்னத்த பண்றது? இந்தா மா நீ வேற அவனை உசுப்பேத்திக்கிட்டு அட சே அவனை கீழே தள்ளிட்டு கடைய பெருக்கி தள்ளு...." சீதா கல்யாணை கண்டு சிரித்தவாறு கடைக்குள் செல்ல அங்கு நடந்ததை மறந்து தன் மீது உள்ள மண்ணை தட்டி விட்டு கல்யாணும் சிரித்துக்கொண்டே சீதாவை பின் தொடர்ந்து கடைக்குள் செல்கின்றான்...

யார் இந்த கல்யாண்?

சாய் பல்லவி அடித்து தலையில் அடிபட்டதால் கல்யாண் காணும் கனவாக இருக்குமோ?

இல்லை பிட்டு புத்தகம் படித்துவிட்டு சாய் பல்லவியை கனவு கண்ட கல்யாணாக இருக்குமோ?

கல்யாண் உண்மையிலே தூங்கி எழுந்துவிட்டானா? இல்லை இது கூட ஒரு கனவாக இருக்குமோ?

சொல்லப்போனால் நான் எழுதுகின்றேன் என்று நீங்கள் நினைப்பது கூட ஒரு கனவாக இருக்குமோ?


கனவாக கண்டேன் என்று நினைத்து கதையாக எழுதுகிறேன் என்று நினைத்து நான் எழுதியது,

சிவராஜ் பரமேஸ்வரன்.

பின் குறிப்பு : நீங்கள் படித்த கல்யாணத்திற்கும் என் நண்பன் கல்யாணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை! என் நண்பன் கல்யாணத்திற்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. அவருக்கு எந்த பித்தும் கிடையாது. அவர் ஒரு டீடோட்டலர். ராமனாக பிறக்க வேண்டியவர் கல்யாணாக பிறந்துள்ளார். நல்லவருக்கு நல்லவர் கேட்டவருக்கும் நல்லவர். யாருக்கும் தீங்கு நினைக்காதவர்.2 views0 comments

Recent Posts

See All
bottom of page