top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

காலம் கடந்த காதல் கதை - ஒன்று

Updated: Aug 26, 2022



மதுரவாயல் | சென்னை | 20-01-2005


மதுமிதா சுபாஷிணியுடன் பேசிக்கொண்டு எங்களை கடந்து செல்ல, சாரி எங்களை அறிமுகம் செய்ய மறந்துவிட்டேன்! நாங்கள் நால்வர்; நான், மூஸா, சுப்பு, விக்கி. நங்கள் அங்கு உட்கார்ந்திருந்தோம். அங்கு என்பது எங்கள் கல்லூரியின் பெரிய ஆலமரத்தின் அடியில் உள்ள செங்கல் பலகை. மதுமிதா எங்களை கடந்து செல்லும் பொழுது மூஸாவை திரும்பி பார்த்தாள். எங்களிடம் பேசிக்கொண்டிருந்த மூஸா சிரித்துக்கொண்டே கண்களால் கேன்டீன் வருகிறேன் போ என்று மதுமிதாவை பார்த்து தலை அசைத்து எழுந்து "விக்கி பைக் சாவி தா. செட்டி வாடா பெட்டி கடை வரை போய்ட்டு வந்துடலாம்" என்று சொல்ல சுப்பு சீரியஸ்ஸாக "மூஸ்ஸு கேன்டீன் போக எதுக்குடா பைக்? வாயேன் அப்படியே நடந்து போவோம், என்ன டா விக்கி?" என்று சொல்ல விக்கியும் நானும் சிரித்தோம். Oh my god, நான்! யாருன்னு இன்னும் சொல்லலே, நான் தான் சிவா இந்த கதையை எழுதுறவன். இந்த மூன்று கபோதிகளின் உற்ற நண்பன்! என்னை இவர்கள் செல்லமாக செட்டி! என்றழைப்பார்கள். அது போல் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் உண்டு. மூஸாவிற்கு JCB, சுப்புவிற்கு மாமி, விக்கிக்கு வாய்நக்கி. இதற்கெல்லாம் பெயர் காரணம் கேக்காதீர் அது தனியாக வேறொரு புது கதையாக பின்னர் வெளிவரும். இந்த கதை மூஸாவாகிய JCBயின் கதை சாரி JCB ஆகிய மூஸாவின் கதை! நான் கொஞ்சம் தடுமாறுவதற்கு மன்னிக்கவும் தூக்கக்கலக்கத்தில் எழுதுவதால் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும்.


ஆக நாங்கள் நான்கு பேரும் கேன்டீன்க்கு சென்றோம், கேன்டீன் செல்வதற்கும் பைக் தேவைப்பட்டது! 40 மீட்டர் தூரமே என்றாலும் ஒரு கெத்திற்காக பைக் தேவை பட்டது. 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த காலம் அது, அது ஒரு பொற்காலம்! சுப்புவின் பஜாஜ் அஸ்பையரில் நானும், மூஸாவின் பல்சரில் விக்கியும் கெத்தாக கேன்டீனில் வந்து இறங்க ஒருவர் கூட கண்டுகொள்ளவில்லை.


அங்கு எங்களை கண்ட விக்டர், தனது trade மார்க் சிரிப்பால் மூஸாவை பார்த்து கண்ணடித்து சிரித்துக்கொண்டே மூஸாவை தவிர்த்து எங்கள் மூவரையும் பிடித்து கேன்டீன் வாசலின் படிக்கெட்டில் உட்காரவைத்தான். மூஸா உள்ளே செல்ல சுபாஷிணி வெளியே வந்தாள். அவளும் எங்கள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள். விக்டரை பார்த்து சிரித்தாள், சொல்ல மறந்து விட்டேன்! விக்டர் மிகவும் மென்மையான சொல்லப்போனால் மிகவும் நல்லவன். நேர்பட பேசுகிறவன்! பாடிபில்டர்! பார்க்க முரட்டு சிங்களாக இருந்தான்! பெண்களிடம் பேச்சை அறவே வெறுத்தவன்! அவனருகில் சுபாஷிணி உட்கார்ந்து கொண்டு பேச்சு கொடுக்க "ஹலோ" என்றாள். திடீரென்று விக்டருக்கு வேர்த்து கொட்டியது! அதுவரை எங்களிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தவன் வராத போன் அழைப்பிற்கு ஹலோ சொல்லிக்கொண்டு எழுந்து ஓடிச் சென்றான். விக்கி சிரித்துக்கொண்டு சுபாஷினியிடம் "ஏன் நீ தெரிஞ்சுக்கிட்டே அவன இப்படி பண்றே?" சுபாஷினி நய்யாண்டித்தனமாக "ஏன் டா நீங்க மட்டும் நாங்க நடந்து போகும் போது உங்க பிரண்ட்ஸ் பேர சொல்லி கலாய்ப்பீங்க நாங்க ஒரு ஹலோ சொல்ல கூடாதா" (பின் குறிப்பு : இது 2005ல் நடக்கும் கதை நாங்கள் அதாவது பையன்கள் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடைய காலம் அது! பெண்களிடம் பேசுபவன் திறமைசாலியாக கருதிய காலகட்டம் அது! இன்றுள்ள கால கட்டத்தின் கதையை கொண்டு ஒப்பிடவேண்டாம்)


மாமியும், வித்யாவும் அங்கு வர சுப்பு வழிந்த சிரித்துக்கொண்டு எழுந்து விலகிச்சென்றான். கார்த்திக் வர சுபாஷிணியும் அவனுடன் பேசிக்கொண்டு விலகி சென்றாள். நானும் விக்கியும் எங்கள் நிலமையை பார்த்து காரி துப்பிக்கொண்டோம். காரணம் நான் விரும்பிய பெண் என்னை வெறுத்தாள் விக்கி விரும்பிய பெண் இருமுறை மாற்றான் தோட்டத்து மல்லிகை ஆனாள்! பிறகு விக்கி ஒரு முடிவெடுத்தான்! தான் சந்திக்கும் எந்த ஒரு பெண்ணையும் விடாமல் காதலிப்பதென்று! ஆனால் அதையும் யாரும் மதிக்கவில்லை! அதிலிருந்து வாய்க்கு வந்த பொய் கதைகளை பேசலானான், அன்றையிலிருந்து வாய் விக்கி என்றழைக்கப்பட்டான்.


(பின் குறிப்பு : சுப்புவிற்கும் மாமிக்கும் உள்ளது புனிதனமான நட்ப்பு! இதை நான் இங்கு சொல்லாவிட்டால் எனக்கு கொலை மிரட்டல் கூட வர வாய்ப்பு இருக்கின்றது!! ஆகையால் நான் இதை சொல்கின்றேன் நீங்களும் நம்புங்கள். கார்த்திக் யாரென்றே எனக்கு தெரியாது! வித்யா எங்கள் கூட்டத்தின் அபிமான நண்பி! வித்தியாவை பற்றி பிறகு சொல்கின்றேன்! கவலை வேண்டாம் அவள் மிகவும் நல்லவள்!)


நான் கதையை விட்டு எங்கோ போய்விட்டேன், மன்னிக்கவும்! எல்லோரும் சென்ற பிறகு மூஸா கோபமாக வெளியே வந்தான்! மதுமிதா பின்தொடர்ந்து வந்தாள்! நாங்கள் மரியாதை கொண்டு எழுந்து நின்றோம் (பெண்களுக்கு நாங்கள் அன்று கொடுக்கும் மரியாதை! அதுவும் நண்பன் காதலி என்றால் சொல்லவேண்டுமா) மதுமிதா என்னிடம் "மூஸாவிற்கு சொல்லி புரியவைங்க சிவராஜ்! இது அவர் ஊரு இல்லை! இது மெட்ராஸ்! எங்கப்பா ஒரு கிரிமினல் லாயர்! இவரு பேசுற மாதிரி எல்லாம் நடக்காது" என்று சொல்லி அழுதுகொண்டே படி ஏறி ஓடி சென்றாள். நானும் விக்கியும் முழித்துக்கொண்டிருக்க, இதை பார்த்துக்கொண்டிருந்த சுப்பு, மாமி, வித்யா எங்களிடம் ஓடி வர, கார்த்திக்கும் சுபாஷிணியும் மதுவிடம் ஓடி சென்றனர்.


சோகமாக மூஸா கேன்டீன் திண்ணையில் உட்கார சுப்பு மூஸாவின் தோலில் கை வைத்து என்ன ஆச்சு என்பது போல் பார்த்தான். மூஸா எங்களை பார்த்து "அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு! அந்த சுரேஷ் பாடு பூ மவன் போட்டு கொடுத்துட்டான். அவங்க அப்பா சீக்கிரமா அவளுக்கு சொந்தத்துல மாப்பிள பேசி முடிச்சுட்டாரு!" சுப்பு எங்களை பார்க்க நாங்கள் மௌனகமாக இருந்தோம், விக்கி சீறிக்கொண்டு எங்களை விளக்கி "மூஸ்ஸு நீ டென்ஷன் ஆகாதே! உங்க மச்சான்னுக்கு போன் போட்டு கல்யாணத்துக்கு ரெடி பண்ண சொல்லு! பொண்ண சென்னைல தூக்குறோம் புதுக்கோட்டைல தாலிகட்டுறோம், சாரி தாலி கட்டுறே!! என்ன நான் சொல்லறது!!" என்று விக்கி சொல்ல, எல்லோரும் விக்கியை பார்த்து வெறுப்புடன் கை ஓங்க மூஸா மட்டும் சிரித்திக்கொண்டு எழுந்து வந்து விக்கியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். சுப்புவும் நானும் திகைத்து நிற்க சுப்பு சொன்னது "சைத்தான் சிரிக்க ஆரம்பிடிச்சு! ரகளை confirm"


மதுவிடம் பிளான் விளக்கப்பட்டது! சுபாஷிணியும் கார்த்திக்கும் பயந்தனர்! மாமியும் வித்யாவும் இதிலிருந்து விலகிக்கொண்டனர், அவர்கள் இதற்க்கு உதவவும் முடியாது. நங்கள் மூவரும் பயந்து நடுங்கினோம் முக்கியமாக நான் நடுங்கினேன். எங்கள் பயம் எங்களுக்கு அறியாமல் இருக்க சிரித்துக்கொண்டே இருந்தோம்! பயம் கூடுந்தோறும் சிரிப்பின் சத்தம் கூடியது.


மூஸா, மச்சானுக்கு போன் செய்தான்! முதலில் பச்சை பச்சையாக திட்டு விழுந்தது கால்மணிநேரம் கழித்து மச்சான் நிதானத்திற்க்கு வந்தார். ரெஜிஸ்டர் ஆபீஸில் வைத்து கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கபட்டது. மச்சானும் லேசு பட்ட ஆள் இல்லை புதுக்கோட்டையில் ஒரு முக்கிய புள்ளி அவர்! எதிரியின் நேர்மைக்கும் நாணயத்திற்கும் மதிப்பளிப்பவர். நல்லவருக்கு நல்லவர் கெட்டவருக்கு கெட்டவர்!


திருச்சிக்கு பிளேனில் சென்று அங்கிருந்து காரில் புதுக்கோட்டைக்கு சென்று விட வேண்டும். சுபாஷிணியும் கார்த்திக்கும் மதுமிதாவை ஏர்போர்ட் கொண்டு வந்து விடுவார்கள். நானும் மூஸாவும் பைக்கில் ஏர்போர்ட் வந்து விடுவோம். சுப்புவும் விக்கியும் இரண்டு நாள் முன்கூட்டியே புதுக்கோட்டை சென்று கல்யாண ஏற்பாட்டை செய்வார்கள். நான் இங்கிருந்து நிலவரத்தை பார்த்து இரண்டு நாட்கள் கழித்து புதுக்கோட்டை செல்ல வேண்டும். இது தான் பிளான். பீதியுடன் எல்லோரும் மண்டையை சரி என்றாட்டினர்.


இரண்டு நாள் முன்னர் சுப்புவும் விக்கியும் புதுக்கோட்டைக்கு புறப்பட்டனர். புதுக்கோட்டையில் காரியங்கள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. மூஸா வீட்டில் முதல் திருமணம். அடிதடி சமாளிக்கும் ஏற்பாட்டும் ரெடியாக இருந்தது. 50 பேர் அதற்காக ஒதுக்கப்பட்டிருந்தனர்.


சம்பவம் நடக்கும் நாள், நானும் மூஸாவும் பல்சரில் ஏர்போர்ட் நோக்கி சென்று கொண்டிருந்தோம். மூஸா என்னை சுபாஷினிக்கு போன் செய்து நிலவரம் கேட்க சொன்னான். எனது போனில் பேலன்ஸ் இல்லை, இன்று போல்ல அன்று அவுட்கோயிங்ர்க்கும் காசு வசூலிக்கப்பட்டது!! கோபத்தில் மூஸா தனது நோக்கியா 3300வை தந்தான்! போன் செய்தவுடன் சுபாஷினி எடுத்தாள், அவர்கள் கார்த்திக்கின் காரில் மதுமிதாவோடு ஏர்போர்ட்டிற்கு வந்துகொண்டிருக்கிறோம் என்றனர். நாங்கள் போரூரில் ட்ராபிக்கில் மாட்டி முழித்துக்கொண்டிருந்தோம். என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு குறுக்கு வழியை எடுத்தோம். அது ஒரு ஆள்நடமாட்டமே இல்லாத ஒரு காடு போல இருந்தது, போரூர் அன்று அப்படித்தானே இருந்தது. எங்கே போகிறோம் என்று தெரியாமல் போய்க்கொண்டிருக்க ஒரு கிழவர் அங்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் ஏர்போர்ட் போக வழி கேட்க ஒரு பைபாஸ் subwayவில் சென்றால் சீக்கிரமாக highway போய் சேர்ந்து விடலாம் என்று கூறினார். அந்த subway வந்து சேர்ந்தோம், ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது! போகவா வேண்டாமா என்று யோசிக்கும் நேரம் இல்லாமல் மூஸா வேகமாக subway உள்ளே சென்றான் சூரிய வெளிச்சம் மறைந்து இருட்டாகியது, பல்சரின் லைட் ஆன் செய்தவுடன் பியூஸ் ஆகியது!! இருட்டில் சற்று நேரம் ஓட்டிய பின்னர் வெளிச்சம் தெரிந்தது! வெளியே வந்தோம்! பெரியவர் சொன்னது போல் அது ஒரு highway! நேரே வந்தோம் highwayயில் வேகமாக செல்ல பைக் அடைத்தது! பெட்ரோல் குறைவாக இருந்தது! போகும் வழியில் உள்ள பங்க்கில் பெட்ரோல் நிரப்ப சென்றோம்! பைக்கை பெட்ரோல் பம்ப்பின் அருகில் சென்று நிறுத்திய மூஸா 30 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு சொன்னான். பங்க் பையன் சிரித்துக்கொண்டே விலையை காட்டினான். பெட்ரோலின் விலை கண்டு அதிர்ச்சி உற்றோம்!! லிட்டருக்கு 200 ரூபாய்! அதிர்ச்சி தாங்காமல் "ஓத்தா என்னய கேன பூ ன்னு நினைச்சியா? நேத்து வரைக்கும் 45 ரூவா! ஒம்மாளே மேனேஜர கூப்பிடுறா!! ஓத்தா செட்டி என்னனு பாருடா!" என்று மூஸா கத்த!! நான் சுற்றி பார்த்து பம்ப் மீதுள்ள தேதியை மூஸாவிடம் காண்பித்தேன், 20-01-2029 என்று இருந்தது! மூஸா கையில் இருந்த பர்ஸ் கீழே விழுந்தது! அதிலிருந்து மதுமிதாவின் புகைப்படம் வெளியே வந்து தரையில் கிடந்தது!!


மன்னிக்கவும் எனக்கு நல்ல தூக்கம் வருவதால் இக்கதையை இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன்! தூங்கி எழுந்தவுடன் புது சிந்தனையுடன் எழுத முயற்சிக்கின்றேன்! கம்ப்யூட்டரை அணைக்க முற்படும் பொழுது,


"நைட்டுல தனியா! கம்ப்யூட்டர்ல என்ன பண்றே?" என்று என் மனைவி கேட்க,

"இல்லே மா புதுசா ஒரு கதை! அது தான் எழுதுறேன்!"

"நம்புற மாதிரி இல்லையே!"

"அட சத்யமமா!! தோ பாரு!" என்று காண்பிக்க! கரண்ட் போகின்றது!

"நல்ல சகுனம்!!"

"இளையராஜா கூட முதல் காம்போஸிங்ல கரண்ட் போச்சாம்!!"

"சரி சரி போ போய் தூங்குற வழிய பாரு!!"


கற்பனை கலந்து எழுதியது,

சிவராஜ் பரமேஸ்வரன்.


4 views0 comments
bottom of page