top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

தமயந்தன்

Updated: Aug 26, 2022என்ன பேசுவது என்ன மெசேஜ் டைப் செய்வது என்று தெரியாமல் மோனிஷாவின் இன்ஸ்டாக்ராமின் மெசஞ்ஜரை பார்த்துக்கொண்டிருந்தேன். சரி கேட்டுவிடலாமா என்று முடிவு செய்து என் மனதில் உள்ள பாரத்தை எல்லாம் டைப் செய்தேன். என் கேவலமான புத்தி வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. சீ என்று தோன்ற மறைமுகமாக கேட்கலாம் என்று மீண்டும் டைப் செய்தேன். இம்முறை நான் யோக்கியவான் போன்று தோன்றினாலும் எழுத்துக்களின் அர்த்தம் யோக்கியமாக இல்லை என்பதை உணர்ந்தேன். மீண்டும் முதலிருந்து டைப் செய்ய தொடங்கினேன்! டைப் செய்து செய்து இரவு 7 மணிக்கு ஆரம்பித்த இந்த கொடுமை விடியற்காலை 5.30 மணி ஆகியும் முடிவுக்கு வரவில்லை. என் ஏக்க உணர்வு ஒரு முடிவுக்கு வராமல் துடிதுடித்தது. நெஞ்சு படபடத்தது கண்கள் வெறிவெறித்தது நாக்கு வறவறண்டது உதடுகள் துடிதுடித்தது இந்த உணர்வுகளின் தாப கோபத்தில் போனை தூர எறிய பஞ்சு தலைகாணி மேல் விழுந்து புரண்டு கட்டிலின் ஓரமாக போய் நெளிந்து ஒளிந்துகொண்டது. 5.45 மணிக்கு அலாரம் அடித்தது, வழக்கம் போல் எனது ஆப்பிள் ஐபாடை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு விண்ணை தாண்டி வருவாயா படத்தில் வரும் "கண்ணுக்குள் கண்ணை ஊற்றி"கண்ணுக்குள் கண்ணை
ஊற்றி கொண்டே இல்லை
இல்லை என்றாயே கள்ளம்
ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச பக்கம்
வந்து தொட்டு பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்று அருகே வந்து
முத்தமும் தந்தேன்....

பாட்டை கேட்டுக்கொண்டே சிகப்பு கம்பிளியை எடுத்து போர்த்திக்கொண்டு என் பெட்டியை நோக்கி நடந்து சென்றேன். என் பெயர் பதித்து (தமயந்தன், பிறப்பு - 1755, இறப்பு - 1785) மதிலில் நேரே நிற்கவைத்து மாட்டப்பட்டிருந்த பிணப்பெட்டியை திறந்து உள்ளே சென்று நிம்மதியாக படுத்துக்கொண்டு மூடிக்கொண்டேன். மணி 5.55, சூரியன் உதிக்கும் நேரம் ஆகிக்கொண்டிருந்தது. அப்பொழுது கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச்சிற்கு இன்ஸ்டாக்ராமிலிருந்து ஒரு மெசேஜ் வந்தது. யாரென்று பார்த்தேன் "Message from Monisa" என்ற தலைப்பு, கிளிக் செய்து உள்ளே செல்ல ஒரு போட்டோ அனுப்பப்பட்டிருப்பது தெரிந்தது ஆனால் அனுப்பிய போட்டோ ஆப்பிள் வாட்ச்சில் தெளிவாக தெரியவில்லை! அனுப்பியது மோனிஷா என்பதால் பரப்புடன் பெட்டியை திறந்து போனை எடுக்க வெளியே ஓடிவந்தேன்! ஒளிந்து கொண்டிருந்த அந்த போனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை! நேரம் 5.58 ஆக சூரியன் வெளியே தலை காட்ட தொடங்கியது! படுக்கை விரியை தூக்கி எறிய போன் இடுக்கிலிருந்து பறந்தது. ஓடி சென்று போனை எடுத்து பார்த்த பொழுது, மோனிஷா நான் கடைசியாக அனுப்பிய "how are you?" விற்கு பதில் மெசேஜாக தனது கணவன் மற்றும் குழந்தையுடன் இருக்கும் போட்டாவை பகிர்ந்து "Am fine! I got married! How are you?" என்று பதில் அனுப்பியிருந்தாள். உறைந்து போய் நின்ற நான் அவளுக்கு அனுப்பலாம் என்று வைத்திருந்த மெசேஜை டெலீட் செய்ய முற்படும் பொழுது சூரியன் வெளியே வந்து என்னை தன் நீல நெருப்பில் நனைத்து குளிதக்க வைத்தது. மறுநொடி, நினைவுகள் மங்கியது எல்லாம் வெள்ளை நிறமாகி நான் மேகத்தில் மிதந்து கொண்டிருந்தேன்!!


மறுநொடிக்கு மறுநொடி, வியர்த்து ஊற்றிக்கொண்டு தூக்கத்திலுருந்து எழுந்தேன்! சீலிங் பேன்னின் கற் கற் சத்தம் என்னை நிதானத்திற்கு கொண்டுவந்தது. அருகே பார்க்க, அரை நிர்வாணமாக ஒரு பெண் களைப்போடு தூங்கிக்கொண்டிருந்தாள்! மொபில் போனில் நேரம் இரவு 1 என்று காட்டியது. நோடிபிகேஷனில் மோனிஷாவிடமிருந்து இன்ஸ்டாகிராம் மெசேஜ் ஒன்று வந்திருந்தது! போய் பார்த்தேன்! நான் கனவில் கண்ட அதே மெசேஜ் போட்டோவுடன் "Am fine! I got married How are you?" என வந்திருக்க! கூட நான் அனுப்ப நினைத்து அனுப்பாத மெசேஜும் மெசேஜ் பாக்ஸில் அப்படியே இருந்தது,


அனுப்ப நினைத்து அனுப்பாத மெசேஜ் - "மோனிஷா என் நிலைமையை நீ புரிந்து கொள்வாய் என்று நினைக்கின்றேன்! என் உணர்வுகள் என் கட்டுப்பாட்டை இழந்து இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருக்கின்றது! இனியும் நான் இப்படி உன்னோடு பழகினால் நான் என் கட்டுப்பாட்டை இழந்துவிடுவேன்! இந்த குறை உன்னுடையது அல்ல இந்த குறை என்னுடையது! உன்னை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும். மீண்டும் சந்திக்கும் வரை பிரியா விடை பெருகின்றேன்.


என்றும் அன்புடன்,

தமயந்தன்."


மெசேஜை மீண்டும் படித்து மறுமுறை யோசிக்காமல் மோனிஷாவிற்கு அனுப்பிவைத்து மொபைல் போனை தூர எறிந்தேன். அருகில் தூங்கிக்கொண்டிருந்த அரை நிர்வாணப்பெண் என்னை பார்த்து தூக்கக்கலக்கத்தில் ஏதோ முனங்கி சிரித்துக்கொண்டு திரும்பி படுத்துக்கொண்டாள். அவள் திரும்பியவுடன் இரவின் வெளிச்சத்தில் அவளின் கழுத்தோரம் இருந்த ரோஜாப்பூ டாடூ ஒரு வித ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியது. என்னை அறியாமல் நான் அவளின் அருகில் சென்று கழுத்தோரம் என் உதடுகளால் முத்தம் பதித்தேன் தூக்கத்தில் அவள் முனங்க என் முத்தம் வீரியம் கொள்ள ஆரம்பித்தது!! என் பற்கள் மெல்ல மெல்ல வளர்ந்து அதன் மிருகத்தன்மையை அடைய அரபித்திருந்தது! மெதுவாக அவளின் கழுத்தில் உள்ள அந்த அழகிய பச்சை நரம்பை கடித்து ரத்தத்தை சுவைக்க தொடங்கினேன் முனகல் சத்தம் அலறல் சத்தமாக மாறியது! மோனிஷாவை நினைத்துக்கொண்டு இவளின் ரத்தத்தை சுவைத்து உறிஞ்சினேன். அழகிய புதுமையாய் இருந்த அவள் உருகிய மெழுகாய் கரைந்து சிதைந்தாள். என் உள்ளுணர்வு சற்று அடங்கியது....மோனிஷாவின் இதழ் முத்தத்தை நினைத்துக்கொண்டு மூர்க்க உணர்ச்சியில் படுக்கையில் சாய்ந்தேன்.


337 வருடங்கள் காட்டேரியாக வாழ்ந்துகொண்டிருக்கும்,

தமயந்தன்.


நேற்று இரவு சரியாக 12 மணி 10 நிமிடத்திற்கு மலம்புழா டாம் பார்க்க சென்றேன். அங்கே கருங்கல் நந்தி சிலை பாறையில் முழு நிலவின் வெளிச்சத்தில் ஒரு சிகப்பு டைரி மினுமினுத்தது. அருகே சென்று பார்த்த பொழுது டைரியின் இடுக்கே ஒரு சிகப்பு நூல் வைத்து மூடபட்டறிந்தது. அதை திறந்து அந்த மூன்று பக்கத்திலிருந்ததை அப்படியே எழுத்து பிழையில்லாமல் சொந்தமாக வழக்கம் போல் ஒரு பொய் கதையாக எழுதியது,

சிவராஜ் பரமேஸ்வரன்.

36 views0 comments

Recent Posts

See All
bottom of page