top of page
  • Writer's pictureSivaraj Parameswaran

புது கதை

Updated: Oct 10, 2022தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே...

இந்த பாட்டை head set-ல கேட்டுக அண்ணா நகர் மெட்ரோ ஸ்டேஷனில் ரயில் நின்றது. அன்று கூட்டம் சற்று குறைவாகவே இருக்க நான் கதவருகே உள்ள சீட்டில் உட்கார்ந்தேன். ரயில் புறப்பட என் எதிரே மஞ்சள் சுடிதாரில் ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள். மாஸ்க் அணிந்திருந்தாள். கையில் american tourister பெட்டி. வெளிநாட்டிலிருந்து வந்ததற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. தன் பெட்டியை சரி செய்து கை பையிலிருந்து சானிடைசரை எடுத்து கைகளை கழுவி என்னை எதர்ச்சையாக ஏறெடுத்து பார்த்தாள். அவளின் கண்களில் ஏதோ ஒரு கலக்கம் தெரிந்தது. சட்டென்று என்னை பார்க்காதவாறு குனிந்து கொண்டாள். அடிக்கடி என்னை ஏறெடுத்து பார்க்க என் கவனம் முழுவதும் அவள் பக்கம் திரும்பியது.


எங்கோ கண்டு மறந்த கண்கள், அந்த கண்களின் ஈர்க்கும் சக்தி என் ஞயாபகங்களை திக்குமுக்காட செய்தது. எப்படி யோசித்தும் நினைவுக்கு வரமருக்கும் அந்த முகம். அவள் வேறு இடத்திற்கு மாற முற்படும் பொழுது ரயில் அடுத்த நிறுத்தத்தில் நின்றது. கூட்டம் அலைமோதியபடி ஏறியது. இருந்த காலி இடங்கள் நிரம்ப வேறு வழியின்றி அவள் அங்கேயே அமர்ந்தாள். இம்முறை அவள் என்னை பார்த்த பார்வை எங்கோ பார்த்த மறந்த அதே பார்வையாய் என் நினைவுகள் என்னை எங்கோ இழுத்து சென்றது. ஏதோ புதை குழியின் ஆழத்திற்கு இழுத்து செல்வது போல் என் நினைவுகள் வேகமாக என்னை இழுத்துச் சென்று என் பள்ளியின் Annual Day நாளன்று கொண்டு சென்று நிறுத்தியது.வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி...

என்ற பாடல் தூரே ஒலிக்க, என் நினைவில் தமிழ் செல்வி நடந்து வந்துகொண்டிருந்தாள்...


தமிழ் செல்வி, எங்கள் பள்ளியின் கந்தர்வ ராணி, தமிழ் பட நடிகை சாய் பல்லவி பள்ளி பருவத்தில் எப்படி இருத்திருப்பாரோ அப்படி இருந்தாள் தமிழ் செல்வி. அவளின் சிரிப்பிற்கும் கன்னங்குழிக்கும் பருவ பருக்களுக்கும் மயங்காத எவரும் அந்த பள்ளியில் இருந்திருக்க மாட்டார்கள். அவளின் கன்னங்குழிக்கு மயங்கிய வாணரக்கூட்டத்தில் நானும் ஒருவன்.


ரயில் தடாரென்று நின்றது, நினைவுகள் கலைந்தது! சுற்றும் முற்றும் பார்க்க இருட்டாக இருந்தது. Underground track என்பதால் ஒரு வித panic mode எல்லோரிடமும் ஒட்டிக்கொண்டது. இதில் நான் தமிழ் செல்வியை தேட அவளை எங்கும் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். ரயிலில் எல்லோரும் இங்கும் அங்கும் ஜன்னல் அருகே என்ன நடக்கின்றது என்று பார்த்துக்கொண்டிருந்தனர். ரயிலின் ஒலிபெருக்கியில் டிரைவர் ஒன்றும் பயப்பட வேண்டாம் ஏதோ signal problem இன்னும் 5 நிமிஷத்துல புறப்படுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தார், அப்பொழுது ரயிலின் வெளிச்சம் மொத்தமும் அணைந்து இருட்டானது. ஒலிபெருக்கியில் டிரைவரின் அலறல் சத்தம் கேட்டது, கூடவே ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தமும் கேட்டது! என் கண்கள் இருட்டில் விரிய அந்த சிரிப்பின் சத்தம் எனக்குள் ஒரு உதறலை தந்தது, தமிழ் செல்வியின் சிரிப்பு சத்தம் "என்ன Shiv நல்லா இருக்கியா? சொன்னேன்ல நான் உன்ன தேடி வருவேன்னு! நீ தான் நம்பல! எல்லோர மாதிரி நீயும் நான் லூஸ்ன்னு நினைச்சுட்டேலே!!" திரும்பவும் வெளிச்சம் வர! ரயில் பின்னோக்கி வேகமாக நகர தொடங்கியது! பின்னாடி வேறொரு ரயில் அதே டிராக்கில் வேகமாக வர "I Missed You Shiv" என்று கூறி அவள் சிரிக்க ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மொத்தமாக இருள் மயமாகின்றது.


கொஞ்ச நேரம் கழித்து கண் விழித்து பார்த்த பொழுது நான் தமிழ் செல்வியின் மடியில் மெரினா கடற்கரையில் நிம்மதியாக படுத்துக்கொண்டிருக்கின்றேன். "I Missed You Shiv" என்று அவள் செல்லமாக கூறி எனது உதட்டோரம் ஒரு முத்தம் வைக்க என் கண்கள் ஈரம் ஆகின்றது.


யாருமே இல்லாத மெரினா கடற்கரையில் நானும் தமிழ் செல்வியும் தனிமையில் சந்தித்தபொழுது அவள் சொன்ன கனவுக்கதை இது...


கனவாக எழுதியது,

Shiv (எ) சிவராஜ் பரமேஸ்வரன்.42 views2 comments
bottom of page