Sivaraj Parameswaran
தாரா
Updated: Aug 26, 2022

தி பார்க் ஹோட்டலின் மொட்டைமாடி ஓபன் டெர்ரஸ் பாரில் நாங்கள் எடுக்க போகும் படத்தின் கதையின் கதாசிரியர்க்குக்கும் படத்தின் இயக்குனருக்கும் ஒரே சண்டை என்ன செய்வது என்று தெரியாமல் அந்த படத்தின் ஒளிப்பதிவாளனாக இருந்த நான் சமாதானம் செய்ய முயன்றேன். அதற்குள் படத்தின் படத்தொகுப்பாளர் சண்டையின் உள்ளே புகுந்து புதிதாக ரகளை செய்ய ஆரம்பித்தார். என்ன செய்வதென்று என்றறியாமல் அருகில் எதோ ஒரு பெண்ணுடன் போனில் கடலையை வறுத்து வேவித்து பேசிக்கொண்டிருந்த கதாநாயகன் சிவாவை அழைத்தேன். சிவா சட்டென்று போனில் ஒரு உம்மா கொடுத்து பேச்சை முடித்து சூடாக விவாதம் செய்துக்கொண்டிருந்த டேபிளின் அருகே வந்து எல்லோரையும் சமாதானம் செய்து அவரவர்கள் இருக்கையில் அமரச்செய்தான்.
எல்லோரும் ஒரு கணம் மௌனமாகி தங்கள் சோமரசத்தை உள்ளே தள்ளினர். எரிச்சலில் உள்ளே சென்ற சோமரசம் வார்த்தை ஜாலங்களாக வெளியே வந்தது "உங்களுக்கு என்ன தான் பிரச்சனை" என்று சிவா கேட்க எல்லோரும் ஒரு சேர கத்தி கூப்பாடிட்டார்கள். நான் மட்டும் அமைதியாய் அமர்ந்து "எக்கேடோ கெட்டு போங்கள்" என்ற தோணியில் எனது மூக்கு கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தேன். இதை கவனித்த சிவா கெஞ்சியவாறு என்னை ஏதாவது செய்ய சொன்னார். நான் அவரிடம் "அப்படியே கொஞ்ச நேரம் விடுங்க ஜி எல்லாம் சரியா போய்டும்" என்று சொல்ல இயக்குனர் பாரதி கத்தி கூப்பாடிட்டார்.
அங்கு நடந்த கூப்பாடுகள், இயக்குனர் பாரதி கதாசிரியர் கோபியுடன் வாதித்துக் கொண்டிருந்தார். படத்தொகுப்பு முரளி இருவரையும் பார்த்து "கொஞ்சமாவது சொந்தமா யோசிங்கடா! அப்படியே கொரியன் படத்தை அப்பட்டமா காப்பி அடிச்சா அசிங்கமா நினைக்க மாட்டாங்க" என்று ஆதங்கத்தில் கத்த அதற்கு கதாசிரியர் கோபி "அவன் அவன் பழைய தமிழ் படத்தையே காபி அடிச்சு புதுசா ரிலீஸ் பன்றான்! நீ என்னடானா! போவியா!!" என்று முட்டு கொடுக்க, இயக்குனர் பாரதி "ஹீரோயின் தாராவை கிளாமரா காட்ட முடியாது!! எதுக்கு தேவை இல்லாம அந்த பெட்ரூம் சீன்? கதைக்கும் அந்த கிஸ் சீன்க்கும் என்ன சம்மந்தம்?" என்று சம்பந்தம் இல்லாமல் சொல்ல. கதாசிரியர் கோபி நக்கலுடன் "யோவ் பாரதி அந்த பெட் ரூம் சீன் தான்யா செல்லிங் பாய்ண்ட்!! அவ ஒன்னும் அந்த சீன் வேணாம்ன்னு சொல்ல மாட்டாளே!! பிளஸ் அவ தானே நேத்து என் கூட படுக்கும் போது என் கிட்ட கிளாமர் சீன் வேணும்னு சொன்னா! அதுக்கு நீ ஏன் யா கோச்சுக்குறே? உன் கூட படுக்க மாட்டேன்னு ஏதாவது சொல்லி சீன் போட்டாளா? வேணும்னா சொல்லு இன்னைக்கு நைட் உன்கூட படுக்க சொல்லறேன்" சிரித்துக்கொண்டே சொல்ல, இயக்குனர் பாரதி கோபத்தில் "பாஸ்டர்ட்! யாரை தப்பா சொல்லறே! அவ ஒன்னும் அப்படி பட்ட பொண்ணு கிடையாது! நேத்து அவ என்ன லவ் பண்றதா சொன்னா! She loves me!! truly, madly, deeply!" இதை கேட்டு அனைவரும் சிரிக்க பாரதியின் கோபம் தலைக்கு ஏறியது!!
எங்கோ ஆரம்பித்து தாரா தான் பிரச்னை என்று தெரிந்த பிறகு, அமைதியாய் இருந்த நாயகன் சிவா "பாரதி சார்! தாரா நீங்க நினைக்குற மாதிரி பொண்ணு கிடையாது! அவளோட நான் பழகி இருக்கேன்! பழகி இருக்கேன்னா புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்குறேன்! ஒரு நாள் இரண்டு நாள் பழக்கம் கிடையாது சார்! பல மாசங்களா அப்படி தான் பழகிட்டு இருக்கோம்" சிரித்துக்கொண்டு கண்ணாடியை துடித்துக்கொண்டிருந்த நான் "பாரதி அவ அப்படித்தான் லவ் பண்றேன்னு சொல்லுவா கடைசியா அவளுக்கு வேண்டியது எல்லாம் சான்ஸ் தான்!! நீங்க இதுக்கு போய்யா இந்த சீன் போட்டிங்க? முரளி நீ ஏன் யா சும்மா இருக்க உனக்கு அவ மடங்கலியா?" சீறி பாய்ந்து முன்னே சாய்ந்த படத்தொகுப்பு முரளி "யோவ் நான் தான் அவளை முதன் முதலா இண்டஸ்ட்ரிக்கு இன்றோ பண்ணதே என் கிட்டேயேவா?" அதற்கு நான் "பாத்திங்களா பாரதி! இங்கயே இந்த நிலைமைனா வெளிய விசாரிச்சீங்கன்னா இத விட கேவலமா இருக்கும்" இதை கேட்டு கோபமடைந்த பாரதி அங்கிருந்த ஸ்மிர்ன் ஆப் வோட்கா பாட்டிலை எடுத்து ஒரே கல்பில் குடிக்க! எல்லோரும் சேர்ந்து அவரை தடுக்க முயன்றனர். பலனில்லை!! வெறி ஏறியே பாரதி பாட்டிலை தரையில் போட்டு உடைத்து நேரே ஓடிச்சென்று மொட்டைமாடியிலிருந்து கீழே குதித்தார்! தப் என்ற சத்தம் நீச்சல் குளத்தில் கேட்டது!
கண் விழுத்து பார்த்த பொழுது பாரதி ஆஸ்பத்திரியில் இருப்பதை உணர்ந்தான். முரளி அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தான். சிவா வழக்கம் போல் போனில் பேசிக்கொண்டிருந்தான்! கோபி அருகில் உள்ள காலி பெட்டில் தூங்கி கொண்டிருந்தான்! தாரா என் தோள் மீது சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்! நான் தாராவின் வளைவு நெளிவுகளை ரசித்துக்கொண்டிருந்தேன். நான் தாராவை பார்த்த விதத்தை பார்த்த பாரதிக்கு டென்ஷன் ஏகுறி ஹார்ட் மானிட்டர் அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. தூங்கிக்கொண்டிருந்த அனைவரும் பயந்து எழ! பதறி அடித்துக்கொண்டு டாக்டர்கள் ஓடி வந்தனர்!
பாரதி டாக்டர்களை பார்த்து "டாக்டர் தாராவ மட்டும் இருக்க சொல்லிட்டு மத்தவங்கெல்லாரையும் வெளியே போக சொல்லுங்க" என்று கத்த! முரளியும் சிவாவும் கோபியும் அமைதியாய் வெளியேறினர். நான்னும் வெளியே செல்ல முயலும் பொழுது தாரா எனது கையை பிடித்து இருக்கச் சொன்னாள்! டாக்டர்கள் ஊசியில் மருந்து ஏற்ற பாரதி கத்திக்கொண்டிருந்தான்! தாரா என்னை திரை சேலைக்கு பின்னால் இழுத்துச் சென்று என்னை வாரி அணைத்து இதழோடு இதழ் சேர்த்து முத்தம் ஒன்று கொடுத்தாள்! எங்கள் திரை நிழலை பார்த்து பொங்கி எழுந்த பாரதிக்கு நெற்றி பொட்டில் உள்ள நரம்பு புடைத்து வெளியே வர ஆரம்பித்தது. அவனை மீண்டும் வெறுப்பேற்ற தாரா அவனை பார்த்து சிரித்துக் கொண்டே எனது கையை எடுத்து அவளது இடுப்பில் வைத்து மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தாள். இம்முறை நான் என் முழு உணர்ச்சியை தாராவிடம் சமர்பித்தேன். இதை கண்ட பாரதியின் நெற்றி பொட்டு நரம்பு புடைத்து வெடித்து ரத்தம் தெறித்து வடிகின்றது. டாக்டர்கள் பதற ஊசியில் மருந்தின் அளவு அதிகமாக்க படுகின்றது. பாரதியின் கண்கள் சொருக அமைதி ஆகின்றான்! டாக்டர்களும் அமைதியாகி பெருமூச்சு விட்டபடி எங்களை கடந்து செல்கின்றனர். அதில் ஒரு டாக்டர் மற்றொருவரிடம் "இந்த மாதிரி ஒரு கேஸ முதல் தடவ பாக்குறேன்! 4 ஸ்ப்ளிட் பெர்சோனாலிட்டி! இதுல என்ன கொடுமைனா அதுல ஒரு பொண்ணு! உண்மையான கேரக்டரான இவன் மட்டும் அந்த பொண்ண உண்மையா லவ் பன்றான்! மத்தவங்கெல்லாம் அந்த பொண்ணோட பிஸிக்கலா இருகாங்க! இவன் மட்டும் உண்மையா லவ் பண்ணி அந்த பொண்ணு கிட்ட மாட்டிக் கிட்டு முழிக்குறான்!" "ஏன் இவன் இப்படி ஆனான்?" "ஏதோ ப்ரொடியூஸர் வித்யாசமான கதை வேணும்ன்னு கேட்டு இருக்காரு! இவன் வித்யாசமா யோசிக்கணும்ன்னு எக்ஸடசி டேப்லெட் எடுத்து இருக்கான்! அது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி இருக்கு!" "ஓ எக்ஸடசி டேப்லெட் சாப்பிட்டா இந்த மாதிரி ஆகிடுமா?" "ஆம்மா!! ஓவர் டோஸ் ஆனா இந்த மாதிரி ஆக சான்ஸ் இருக்கு" "ஓ நோ!! நான் கூட நேத்து எக்ஸடசி டேப்லெட் எடுத்தேன் டாக்டர்!" "Oh my god அப்போ உங்களுக்கு இப்போ நடக்குறது கூட ஹலூஸினேஷன்னா இருக்கலாம்!! By the way!! நீங்க யாரு? நீங்க எப்படி இங்க வந்தீங்க? இங்க என்ன பண்றீங்க?" "நான் தான் டாக்டர் இங்க, இப்போ இந்த கதையை எழுதிட்டே இருக்கேன்....."
ஹலூஸினேஷன்னில் கதையை எழுதி முடிப்பதற்குள் ஹலூஸினேஷன் கலைந்துவிடுகின்றது,
எழுதியவரை ஹலூஸினேஷன்னிலே எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.
பின் குறிப்பு : எக்ஸடசி சாப்பிட்டு விட்டு எனக்கு ஹலூஸினேஷன் வரவில்லை சேமியா பாயசம் மூன்று கப் சாப்பிட்டு அரைமயக்கத்தில் சாய்ந்த பொழுது வந்தது தான் இந்த ஹலூஸினேஷன்.