Sivaraj Parameswaran
Billie Jean - பில்லி ஜீன்
Updated: Aug 26, 2022

கிழக்கு கடற்கரை சாலை 11 அக்டோபர் 2021
மைக்கேல் ஜாக்சனின் "பில்லி ஜீன்" என்ற பாடலை ஹெட்செட்டில் கேட்டுக்கொண்டே தாரா புல்லட் ஓட்ட, பின் இருக்கையில் அவளை கட்டி அணைத்து தோளோடு சாய்ந்து அதே பாடலை நானும் ஹெட்செட்டில் கேட்டுக்கொண்டு இயற்கையை ரசித்தபடி வர எதிரே வந்த லாரி நிலை தடுமாறி எங்கள் புல்லட்டை மோதிவிடுகின்றது! புல்லட் பறந்து செல்ல என் பிடியில் இருந்து தளர்ந்து தாரா என்னை விட்டு வேறு திசையில் பறந்து செல்கின்றாள்! காற்றில் இருவரும் மிதக்க வினாடிகள் மெதுவாக நகர்ந்தது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரே பார்த்த அந்த கணம் தாராவை ஒரு பஸ் வேகமாக இடித்து இழுத்து செல்கின்றது. நான் ரோட்டில் உருண்டு தலைகீழாக விழுகின்றேன்! தலை முதல் கால் வரை மின்னல் பாய்ந்தது போல ஒரு உணர்வு. எழ முயன்றபொழுது, கால்கள் உடன்படவில்லை தலையை திருப்பி எனது உடைந்த ஹெல்மெட் கண்ணாடியின் வழியே பார்த்தபொழுது சிதறி கிடந்த வண்டியின் உதறி பாகமும் தாராவின் உடைந்த ஹெல்மெட்டும் உருண்டு கொண்டிருந்தது. தாரா என்று நான் கத்த ஒரு மின்னல் தலையில் பாய்ந்து என் நினைவுகள் எல்லாம் பளீரென்று வெள்ளை மேகமாக மாறியது! தூரத்தில் மைக்கேல் ஜாக்சனின் "பில்லி ஜீன்"பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது...
"Billie Jean is not my lover
She's just a girl who claims that I am the one
But the kid is not my son
She says I am the one, but the kid is not my son"
பாட்டு கேட்பது திடீரென்று நின்றது, எனது தூக்கமும் கலைந்தது! நான் எழ முயன்றபொழுது உடம்பு இறுகி கல்லாகி போனது போல் ஒரு உணர்வு எழ முடியவில்லை. கண்களும் சரியாக தெரியவில்லை. அறையில் உள்ள வெளிச்சம் கண்களை கூச செய்தது! கண்களை மறைக்க முயன்றபொழுது கைகள் எழவில்லை என் உணர்வுகள் சற்றே தடுமாறியது. பயம் ஆட்கொண்டது மூளை வேகமாக சிந்திக்க துவங்கியது! கண்கள் இன்னும் மங்கலாகவே இருந்தது. வெளிச்சத்தின் கொடுமை காரணமாக கண்களை மூட முயன்றேன் ஆனால் மூட முடியவில்லை. நெஞ்சு படபடத்தது எனக்குள் ஒரு வித பதட்டம் நிலவியது. தூரே இரு உருவங்கள் நீல நிற நிழல் வடிவமாக என் அருகே வருவது தெரிந்தது. பேச வாய் திறந்தேன் பேச்சும் வரவில்லை. அருகே அவர்கள் வர வர அவர்கள் உருவம் கண்ணாடி விளைவது போல வளைந்து நெளிந்தது. அதில் ஒருவர் என் அருகே வந்து தனது விரலால் என்னை தொட முயலும் பொழுது தான் எனக்கு புரிந்தது நான் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இருக்கிறேன் என்று! அவர் எதையோ கண்ணாடி பெட்டியின் மீது அழுத்த, என் கண்ணாடி கூடு பெட்டி பின் புறமாக சாய நான் அந்த பெட்டியிலிருந்து வெளியே வருவதை உணர்ந்தேன். எனக்கு குளிர தொடங்கியது!
என் தலை கை கால் எல்லாவற்றையும் உணர ஆரம்பித்தேன்! கண்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது! நீல நிற உடை அணிந்த டாக்டர்கள் எனது அருகே வந்து என்னை ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு பேச்சும் வந்தது. நான் அவர்களிடம் "தாரா எப்படி இருக்கின்றாள்" என்று கேட்டேன் அவர்கள் எதுவும் பேசாமல் என்னை ஒரு கணம் பார்த்து அவர்கள் பணியை தொடர்ந்து கொண்டிருந்தனர். குழம்பிய நான் திரும்பவும் "தாரா எப்படி இருக்கா" என்று கேட்க ஸ்பீக்கரில் ஒரு குரல் கேட்டது ஒரு பெண் குரல் "தாரா யாருன்னு எங்களுக்கு தெரியாது! உங்கள கூட இரண்டு நாள் முன்னாடி தான் தேடி கண்டு புடிச்சோம்!" நான் அவளிடம் அந்த குரலிடம் எனக்கு நடந்த விபத்து பற்றி எடுத்துரைத்தேன். எல்லாவற்றையும் கேட்ட அவள் "நீங்கள் சொல்லும் சம்பவம் நடந்து 1000 வருடங்கள் ஆகிவிட்டது! அப்படி பார்த்தால் நீங்கள் சொல்லும் தாரா இறந்து 1000 வருடங்கள் ஆகிவிட்டது!" என்று அந்த குரல் கூற, நான் ஒரு கணம் குழம்பி போய் அந்த நீல உடை அணிந்தவர்களை பார்த்தேன் அப்பொழுது தான் தெரிந்தது அவர்கள் இயந்திர மனிதர்கள் என்று. அதிர்ச்சியும் பயமும் எனது படபடப்பை மேலும் அதிகரித்தது. எனது இதயம் நிமிடத்திற்கு 200 முறை அடித்து இருக்கும் போலும் அலாரம் அடிக்க நிறைய இயந்திர மனிதர்கள் என்னை நோக்கி வந்தனர். எனக்கு பல மருந்துகள் ஏற்றி என்னை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து எனக்குள் சென்ற மருந்துகள் என்னை பொறுமை நிலைக்கு கொண்டுவந்தன! ஸ்பீக்கரில் பேசிய அந்த பெண் என் அருகில் வந்தாள். அவள் தேவலோக சுந்தரியை போலிருந்தாள். என்னிடம் "கடந்த ஆயிரம் வருடங்களாய் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் அழிவை வளர்த்து மொத்தமாக அழிக்கப்பட்டு விட்டான். என்னை எனது அறிவியல் தந்தை 8-ஆம் அப்போலோ உலகம் அழியும் விளம்பில் ஐஸில் உறையவைத்து 500 வருடங்களுக்கு பிறகு உயிர்த்தெழ கட்டமைத்தார். என்னை போல் பலரும் இருந்தனர் ஆனால் பனிப்புயல் காரணமாக நான் மட்டுமே உயிர் பிழைத்தேன். பழைய டேட்டாவை தேடியபொழுது உங்களையும் உறையவைத்தது தெரியவந்தது. இனி மனித குலம் தழைக்க நீங்களும் நானும் தான் உள்ளோம்." இதை கேட்டு கொண்டிருந்த எனக்கு பள்ளியில் படித்த ஆதாம் ஏவாள் நினைவிற்கு வந்தது. சுற்றும் முற்றும் பார்த்து அவளிடம் "இன்னும் மைக்கேல் ஜாக்சன் பாட்டுகள் எல்லாம் இருக்கா?" என்று கேட்டேன். அவள் சிரித்துக்கொண்டே தனது கையில் உள்ள வாட்சின் திரையில் எதையோ அழுத்த...மைக்கேல் ஜாக்சனின் "They don't really care about us" என்ற பாட்டு பாட தொடங்கியது,
"Some things in life they just don't wanna see (Ah)
But if Martin Luther was livin'
He wouldn't let this be, no, no
Skinhead, deadhead (Yeah, yeah)
Everybody's gone bad
Situation, segregation (Woo-hoo)
Everybody, allegation
In the suite on the news
Everybody dog food (Woo-ho)
Kick me, kike me
Don't you wrong or right me
All I wanna say is that they don't really care about us
All I wanna say is that they don't really care about us
All I wanna say is that they don't really care about us
All I wanna say is that they don't really care about us
All I wanna say is that they don't really care about us
All I wanna say is that they don't really care about us"
பாட்டு பாடிக்கொண்டிருக்க அவள் "மார்ட்டின் லூதர் யாரு, டேட்டா பேஸ்ல அவரை பத்தி எதுவுமே இல்லையே" என்று அவள் கேட்க மனிதம் ஏன் அழிந்தது என்பதின் விளக்கம் புரிந்தது...
இந்தக் கதையை 1000 வருடங்களுக்கு முன்னர் எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.
(சரியாக 11 அக்டோபர் 2021 அன்று எழுதியது)
நான் : இக்கதையை நான் மைக்கல் ஜாக்சனிற்கு சமர்ப்பிக்கின்றேன், யாரோ : நீ என்ன பெரிய புடிங்கியா? மைக்கல் ஜாக்சனிற்கு சமர்ப்பிக்க! நான் : கண்டிப்பா நாளைக்கு நான் பெரிய புடிங்கி ஆவேன் யாரோ : அப்போ சமர்ப்பி அதுவரைக்கும் கொஞ்சம் மூடு!! நான் : சாரி மைக்கல்! ப்ளீஸ் வெயிட் டில் டுமாரோ!! யாரோவாக, சமூகம். நானாக, சிவராஜ் பரமேஸ்வரன்.