Sivaraj Parameswaran
NEET பரிதாபங்கள்
Updated: Aug 26, 2022

Jobless Guy: சார் NEET கட்டாயம் தேவையா?
Active Politician: என்ன கேள்வி தம்பி இது? NEET கட்டாயம் தேவை தம்பி! தகுதியான பாரபட்சம் இல்லாமதகுதியான மாணவர்கள் வரணும்னா NEET வேணும் தம்பி!! இன்னும் சொல்ல போனா, வரும் காலத்தில் BE, 12th Std, 10th Std, BSc; எல்லாத்துக்குமே NEET வேண்டும். அப்போதான் தகுதியான மாணவர்கள் உருவாவங்கன்னே!!
Jobless Guy: சார் ஒரு சந்தேகம்!!
Active Politician: கேளு தம்பி!!
Jobless Guy: படிக்குற பசங்க நலனுக்காக இந்த எக்ஸாம் எல்லாம் கொண்டுவரது நல்லாத்தான் இருக்கு! அதே மாதிரி, இந்த MLA, MP, Ministers, CM, PM, etc…எல்லாருக்குமே ஒரு NEET எக்ஸாம் வையுங்களேன். நல்ல தகுதியானஅரசியல் வாதிகளும் வரட்டுமே. என்ன நான் சொல்லறது?
Active Politician: அரசியலுக்கு எதுக்கு தம்பி NEET? காமராஜர் படிச்சுகிட்டா அரசிலியலுக்கு வந்தாரு?
Jobless Guy: நான் NEET-ஐ வேணாம்னு சொல்லலியே! முதல்ல அரசியல் சாசனத்தில் இருக்குறவங்களுக்குவையுங்களேன்னு சொல்றேன்! இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் என்ன? அரசியல் அறிவியல் என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன? இப்படி அடிப்படை தகுதிக்கான ஒரு தேர்வு வையுங்களேன்! அரசியல் தெளிவு கொஞ்சம்இருந்தால் நல்லாத்தானே இருக்கும்னு சொல்ல வந்தேன்!!
Active Politician: என்ன தம்பி கிறுக்குத்தனமா சம்பந்தம் இல்லாம பேசிகிட்டு! போங்க போய் ஒழுங்கா ஏதாவதுவேலை இருந்தா பாருங்க! சும்மா எப்போ பார்த்தாலும் அரசியல்வாதிகளை குறை சொல்லிக்கிட்டு!!
Jobless Guy: கோச்சுக்கிடாதீங்க சார்! சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் சார்! வேலைன்னு சொன்னப்பதான், சார்ஒரு சின்ன பட்ஜெட்ல செம்ம ஸ்கிரிப்ட் இருக்கு! தெரிஞ்ச ஆள் யாராவது இருந்தா சொல்லுங்க….
Active Politician: உன் வாய்ப்பேச்சுக்கு கிடைக்க கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் பாக்குறேன்! ரூவா கொஞ்சம்செலவாவும் பரவா இல்லையா?
Jobless Guy: !!!!
எழுதியது நானே என்கின்ற,
நான்.